மது பாட்டில் விற்ற பெண் கைது
மது பாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.;
சேத்துப்பட்டு
மது பாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நமத்தோடு கிராமத்தைச் சேர்ந்த மைதிலி (வயது 28), போலீசை பார்த்ததும் ஓடினார்.
உடனே போலீசார் விரட்டிச்சென்று மடக்கியதில் அவரிடம் 10 மது பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் மைதிலியை போலீசார் கைது செய்தனர்.