கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக பெண் கைது

கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக பெண் கைதுசெய்யப்பட்டார்.;

Update: 2022-10-15 18:22 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சீனிவாசபுரம் புது தெருவில் வசிக்கும் சரவணன் மனைவி சல்பா(வயது 33). என்பவரது வீட்டின் பின்புறம் வைக்கோல் போரில் 20 லிட்டர் தண்ணீர் கேனில் 7 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் சல்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்