கல்கூடப்பட்டியில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஒயர்மேன் படுகாயம்

Update: 2023-02-06 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). இவர் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். முனுசாமி நேற்று கல்கூடப்பட்டியில் பழைய மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். பழைய மின்கம்பம் ஒன்றில் ஏறி அதில் இருந்த இணைப்புகளை அகற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து, படுகாயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்