பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.;

Update: 2022-06-27 17:29 GMT

அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி திவ்யாஸ்ரீ முதல் பரிசும், மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி ஹேமலதா 2-வது பரிசும், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி சந்திரமதி 3-வது பரிசும் பெற்றனர்.

மேலும் கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி வைஷ்மதி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி சிவகாமி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.

கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் சோமாசிபாடி அல் அமீன் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவி மீனாட்சி முதல் பரிசும், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவி திரிஷா 2-வது பரிசும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நர்மதா 3-வது பரிசும் பெற்றனர்.

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தென்னாங்கூர் அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நிர்மலா முதல் பரிசும், தென்மாத்தூர் கம்பன் கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி பவானி 2-வது பரிசும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நர்மதா 3-வது பரிசும் பெற்றனர்.

மாணவிகளுக்கு பரிசு

பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசு மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜெயஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்