நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படுமா? பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்

ஹலோ எப்.எம்.மில் இன்று ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் அரசியல் கேள்விகளுக்கு பீட்டர் அல்போன்ஸ் பதில் அளித்துள்ளார்.;

Update:2023-10-22 05:30 IST

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றி பேசுகையில், 'காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என்றும், ஒரு சில மாநிலங்களில் ஆட்சி அமைப்பது உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் பா.ஜ.க.வில் பல மாநிலங்களில் கோஷ்டி பூசல் வெளிப்படையாக தெரிகிறது என்றும், தெலுங்கானாவில் இந்த முறை இஸ்லாமியர்கள் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதால், பா.ஜ.க. அந்த வாக்குகளை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு மடை மாற்றும் வேளையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், யார் யாருக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ப இடங்களை கொடுத்து அரவணைத்து செல்லும் பண்பு தி.மு.க. தலைமைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. ஆதரித்தால் காங்கிரஸ் ஏற்குமா?, பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் கோஷம், காவிரி விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளரின் சமகால அரசியல் கேள்விகளுக்கு தெளிந்த நீரோடை போல் பீட்டர் அல்போன்ஸ் பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்