ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?
தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
வாய்மேடு:
தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
நாகை மாவட்டம் தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியின் மூலம் தகட்டூர் ராமகோவிந்தன் காடு, பண்டார தேவன்காடு, சுப்பிரமணியன்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது.மேலும் தொட்டியின் 4 தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இடிக்க வேண்டும்
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.