சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

வடபாதிமங்கலம் கிளியனூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலம் கிளியனூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரேஷன் கடை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிளியனூரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அரிசி, கோதுமை, சீனி, ஆயில், பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, அந்த பகுதியில் உள்ள குடும்ப அட்டையினருக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது.இதனால் மழை காலங்களில் விரிசல்கள் மூலம் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து வருகிறது.

சேதமடைந்த கட்டிடம்

இதன் காரணமாக ரேஷன் கடை கட்டிடத்தில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்து வந்தது.

இதை தொடர்ந்து கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்ட இடத்தில், மழைநீர் உள்ளே செல்லாமல் இருக்க மேற்கூரை பகுதியில் தார்பாய் போடப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்துள்ளதால் அங்கு வைக்கப்பட்ட பொருட்களை வேறு இடத்தில் தற்காலிகமாக வைத்து வினியோகம் செய்வதற்கு கூட மாற்று கட்டிடங்கள் இல்லை.

சீரமைக்க வேண்டும்

இந்த ரேஷன் கடை சேதம் அடைந்துள்ளதால், இங்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதனை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை எதிர்பார்த்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்