தபால் நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுமா?

தபால் நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 12:26 GMT

சென்னை,

புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை இன்றுமுதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.

இந்நிலையில், அஞ்சல் நிலைய கணக்குகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படாது என்றும், வங்கிகளில் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் சேமிப்புக் கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து நாளொன்றுக்கு ஒருவர் ரூ.20,000 வரை சில்லறை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்க வேண்டாம் என்றும், நோட்டுகளை மாற்ற போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, பேருந்துகளில் டிக்கெட் எடுப்பதற்கு, ரெயில்வே நிலையங்களில் கவுன்டர்களில் டிக்கெட் எடுப்பதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ரயில்வே உணவகங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைககளுக்கு ரூ.2,000 நோட்டுகள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்