ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.;

Update:2023-10-12 01:00 IST

ராயக்கோட்டை:-

ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ராயக்கோட்டை உள்ளது. ஊராட்சி அந்தஸ்தில் உள்ள ராயக்கோட்டையில், மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் உள்ளது. அதே போல ரெயில் நிலையம் உள்ளது. இந்த வழியாக பெங்களூரு, தர்மபுரி, சேலம் உள்பட பல நகரங்களுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

மேலும் ராயக்கோட்டையில் இருந்து தினமும் வேலைக்காக பெங்களூரு, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள்.

மேம்படுத்தப்படுமா?

இத்தகைய ராயக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ராயக்கோட்டை, கொப்பகரை, தொட்ட திம்மனஅள்ளி, மேடு அக்ரஹாரம், கருக்கனஅள்ளி மற்றும் சுற்று வட்டார ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அதே போல ஏராளமான கர்ப்பிணி தாய்மார்களும் இங்கு பிரசவத்திற்காக வந்து செல்கிறார்கள். இத்தகைய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றிட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்