கூடலூரில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் முறையாக பொருத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூரில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் முறையாக பொருத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூர்
கூடலூர் நகரில் காலை, மாலை நேரத்தில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். இதனால் நடைபாதை கரையோரம் தடுப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக மாணவர்கள் சாலையில் இறங்கி நடந்து சென்றனர். இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து நடைபாதை கரையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கூடலூர் நகர நடைபாதைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. ஆனால் பல இடங்களில் இரும்பு கம்பிகள் முறையாக பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் தடுப்புகள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.