வன உயிரின வார விழிப்புணர்வு ஊர்வலம்

மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நேற்று நடைபெற்றது.

Update: 2023-10-07 23:30 GMT

மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமை தாங்கினார். வனவர்கள் திருமுருகன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதால் மழை பொழிவு அதிகரிக்கும் என்பது குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினா் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி. மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பின்னர் பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் எல்.எப் ரோடு, மெயின் பஜார், ரத வீதி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, கூலிக்காரன் பாலம் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. இதில் ஆசிரியர்கள், வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்