விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம்
விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம் செய்தன.
கெங்கவல்லி:
கெங்கவல்லி பகுதியில் விவசாய நிலத்துக்குள் காட்டெருமைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது என்று வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். கெங்கவல்லி வனத்துறை அதிகாரிகள் ஆணையம்பட்டி பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகளை பின்தொடர்ந்தனர். 4 காட்டெருமைகள் சுவேதா நதிக்கரையில் சுற்றி திரிந்தன. பின்னர் அந்த காட்டெருமைகளை பச்சமலை பகுதிக்கு விரட்டி விட்டனர். இருந்தாலும் தொடர்ந்து காட்டெருமைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.