ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்

ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்

Update: 2023-03-04 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைச்சாவடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. அவை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருவதோடு சாலைகளையும் மறித்து அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் சேரங்கோடு சோதனைச்சாவடி பகுதியில் உள்ள ரேஷன் கடையை சம்பவத்தன்று காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுயானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்