காட்டு யானை அட்டகாசம்

கடையம் அருகே காட்டு யானை அட்டகாசம் செய்தது.;

Update:2023-03-02 00:15 IST

கடையம்:

கடையம் அருகே மாதாபுரம் கானாவூர் அருகே மலையடிவார பகுதியில் சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு ஒற்றை காட்டு யானை புகுந்து 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது. மேலும் கடவாக்காடு செல்லும் சாலையில் உள்ள பனைமரத்தை பிடுங்கி குருத்தைத் தின்றுவிட்டு சென்றது. அதனை தொடர்ந்து வெய்க்காலிப்பட்டியை சேர்ந்த பரமசிவன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது. பின்னர் வனப்பகுதிக்குள் செல்லாமல் விளைநிலங்கள் உள்ள பகுதிகளை சுற்றி வந்தது.

தகவல் அறிந்ததும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி ஆலோசனையின் பேரில் வனக்காப்பாளர் ஆறுமுக நயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கருத்தபிள்ளையூர், கானாவூர், மாதாபுரம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் கடந்த சில நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்