காட்டு யானை அட்டகாசம்

தென்காசி அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கிருந்த தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றன.;

Update:2023-02-21 00:15 IST

தென்காசி அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கிருந்த தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றன.

ஒற்றை யானை

தென்காசி அருகே உள்ள மத்தளம் பாறை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் விவசாயிகள் நாதன், முத்து ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளது. அங்கு நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த தென்னை, வாழைகளை உண்டு விட்டு நேற்று அதிகாலை மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

வாழைகள் சேதம்

இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை, வாழைகள் சேதமடைந்தது.

காட்டு யானை புகுந்ததில் சுமாா் 1½ ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் சேதம் அடைந்துள்ளதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி தெரிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்