வயலுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

களக்காடு அருகே வயலுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தது.;

Update: 2023-03-15 21:08 GMT

களக்காடு:

களக்காட்டை சேர்ந்த கென்னி டேவிஸ் என்ற விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலம் களக்காடு தலையணை மலையடிவாரம் கள்ளியாறு பகுதியில் உள்ளது. அங்கு நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த வயலுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் சுமார் 5 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே காட்டுப் பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்