ஆசனூர் அருகே சாலையோரத்தில் உலா வந்த காட்டெருமை

ஆசனூர் அருகே சாலையோரத்தில் உலா வந்த காட்டெருமை

Update: 2023-05-03 21:08 GMT

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை காட்டெருமைகள் கடந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே சாலைப்பகுதிக்கு காட்ெடருமை ஒன்று நேற்று முன்தினம் வந்தது. பின்னர் அந்த காட்டெருமை சாலையோரத்தில் உலா வந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சாலையை கடக்கும் காட்டெருமைகள் மற்றும் வனவிலங்குகளை கண்டதும், வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். மேலும் வாகனத்தை நிறுத்தி ஆபத்தான முறையில் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கவேண்டாம்,' என்று அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்