பெருந்துறை
பெருந்துறை காசநோய் மருத்துவமனையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை, மான் ஒன்று வழி தவறி வனப்பகுதியை ஒட்டியுள்ள மாயா அவென்யூ என்கிற குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது.
அப்போது அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய்கள் மானை சுற்றி வளைத்து கடித்து குதறின. இதில் மான் இறந்து போனது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர், கால்நடை டாக்டர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் இறந்து கிடந்த மானை கால்நடை டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் மானின் உடலை தூக்கி சென்று வனப்பகுதிக்குள் குழி தோண்டி புதைத்தனர்.