டிரைவர் மீது வெந்நீைர ஊற்றிய மனைவி கைது
டிரைவர் மீது வெந்நீைர ஊற்றிய மனைவி கைது;
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது51). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா (41). ஜெயராஜ் உடல் நிலை சரியில்லாததால் கடந்த சிலமாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த கவிதா, வெந்நீரை ஜெயராஜ் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெயராஜ் திருத்துறைப்பூண்டி போலீ்ஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.