பல்லாவரம் அருகே மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை

பல்லாவரம் அருகே மனைவி ,குழந்தைகளை கொன்றுவிட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.;

Update: 2022-05-28 05:40 GMT


சென்னை ,பல்லாவரம் அருகே பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். ஐ.டி.ஊழியர். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு நித்ய ஸ்ரீ(வயது 13) என்ற மகளும்,ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அருக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பல்லாவர்ம் போலீசார் அனைவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்றிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்