கரூர்-நொய்யல் பகுதிகளில் பரவலாக மழை
கரூர்-நொய்யல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கரூரில் நேற்று மாலை சுமார் 6.45 மணியில் இருந்து சுமார் 30 நிமிடம் பரவலாக மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடைபிடித்து சென்றதை காண முடிந்தது. இந்த திடீர் மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் மழையின்போது அதிக காற்றின் காரணமாக தாந்தோணிமலை குறிஞ்சி நகர் முதல் தெரு பகுதியில் உள்ள ஒரு மரம் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த மின்கம்பம் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது சரிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நொய்யல், மரவாபாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நொய்யல் பகுதியில் ஒரு மரத்தின் மீது மின்னல் மரத்தின் மீது விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.