கரூரில் பரவலாக மழை

கரூரில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2023-05-19 19:03 GMT

கரூரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. மேலும் 106.7 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாமல் அவதியடைந்தனர். நேற்று காலை முதலே கரூரில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் மதிய நேரத்தில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் மதியம் 3.15 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்