மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-01 20:19 GMT

ராஜபாளையம்,

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகர் பகுதியில் பகலில் கடும் வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். வழக்கம்போல் நேற்று காலையும் வெயில் வாட்டி வதைத்தது.

நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மழை நீர் தேங்கின. வார்டுகளில் பல்வேறு இடங்களில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி இருந்தன. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்துடன் சென்று வந்தனர்.

ஆலங்குளம்

இதில் பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, சொக்கர் கோவில் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சமுசிகாபுரம், சங்கரபாண்டியாபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, கரிசல்குளம், டி.மேட்டூர், காளவாசல், கீழராஜகுலராமன்., வி.புதூர், தொம்ப குளம், நல்லக்கம்மாள்புரம், சாமிநாதபுரம், ஏ.லட்சுமிபுரம், புளியடிபட்டி, கோபாலபுரம், எஸ்.எம்.எஸ்.நகர், பாரைபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்புபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்