கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை

கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2022-09-24 18:45 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் மழை பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல கோகூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, கோவில்கடம்பனூர், ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி சங்கமங்கலம், தே.மங்கலம், புலியூர், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்