ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? பாதுகாவலர் வீரப்பெருமாள்
அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் விதிமுறைகளின் படியே சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்படுவதாக மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம்.
கேமிராக்களை யாரும் அகற்ற சொல்லவில்லை - மருத்துவமனை சாட்சியங்கள்.
அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின்படி அணைக்கப்பட்டது என தெரியாது என ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த வீரப்பெருமாள் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்து செல்லும் போது மட்டும் சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்படும் - மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏறபடவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.