பிரதமர் - ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறாதது ஏன்? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பிரதமர் - ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறாதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2023-04-09 11:12 GMT

ஈரோடு,

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். தேர்தல்போது இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். 2024 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. காலத்திற்கு ஏற்ப, நேர சூழல் காரணமாக பிரதமர்- ஈ.பி.எஸ். சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்