டெல்லி செல்வது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் பட்டவர்த்தமான வெளிப்பட்டது.;
சென்னை,
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் பட்டவர்த்தமான வெளிப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது, ஓ.பன்னீர்செல்வம் கடுமையான ஆத்திரத்தில் உள்ளார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் உடன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வுக்கு வருமாறு பா.ஜ.க. அழைப்பு விடுத்தது. அதனால் டெல்லி செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செல்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.