இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? - கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்
பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம் என்று கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.;
கிருஷ்ணகிரி,
ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என்பதற்கு கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், "பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம். விசாரணையின் போது தப்ப முயன்றதால் இளைஞரிடம் அப்படி நடந்து கொள்ள நேரிட்டது" என்றார்.