முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்- அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதல் அமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2024-08-24 05:41 GMT

சென்னை,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுபான்மையின மாநாடு தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்தது என்றால் அங்கே முதல் அமைச்சர் போய் தொடங்கி வைக்காமல் இருப்பாரா? உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதலமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மற்ற மத நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்ளும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. சேகர் பாபு ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பெயருக்கு என ஒன்றை நடத்துகிறார்கள். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் அப்படியேத்தான் இருப்போம் என்பதை முதல் அமைச்சரின் செயல்பாடு காட்டுகிறது. அண்ணாவின் தமிழை பின்பற்றியவர்கள்; ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டி வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது" இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்