இந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுது தேச உணர்வு மேலோங்கும் - தமிழிசை சவுந்தரராஜன்

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2023-10-27 16:27 GMT

சென்னை,

இந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுது தேச உணர்வு மேலோங்கும் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. பாரதியார் கூட 'பாரத தேசம் கோல் கொட்டுவோம்' என்று தான் பாடியிருக்கிறார். நாம் கூட பாரத மாதா என்று தான் சொல்கிறோம், இந்திய மாதா என்று சொல்வதில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் பாரதம் அல்லது இந்தியா என்று தான் சரத்து சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றிய பொழுது மொழி உணர்வு, மாநில உணர்வு, இன உணர்வு, தேசிய உணர்வு இருந்ததை போல, இந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுதும் அதே தேச உணர்வு மேலோங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பாரத  மாதா, பாரத தேவி, பாரத தேசம் என்று இருக்கும் போது பாரதம் என்பது சரி என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்