வீடுகளில் கிளிகள் வளர்த்தால் நடவடிக்கை-வனச்சரகர் தகவல்
வீடுகளில் கிளிகள் வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனச்சரகர் தெரிவித்தார்;
பேரையூர்,
சாப்டூர் வனத்துறை வனச்சரகர் செல்லமணி கூறியதாவது:-
கிளிகள் வனப்பகுதியில் வாழும் பறவை இனமாகும். அவற்றை வீடுகளில் வளர்க்கக்கூடாது. மேலும் ஜோசியத்துக்காக அவற்றை பயன்படுத்தக் கூடாது. சட்டவிரோதமாக வீடுகளில் கிளிகளை வளர்ப்பவர்களும், ஜோசியத்துக்காக கிளிகளை பயன்படுத்துபவர்களும் தானாக முன்வந்து சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் கிளிகளை ஒப்படைக்க வேண்டும். மேலும் வெளிநாட்டு பறவைகளை வளர்ப்போர் அதற்குரிய அனுமதியை வனத்துறை அலுவலகத்தில் பெற வேண்டும். வனத்துறையினர் ஆய்வின்போது வீடுகளில் கிளிகள் மற்றும் ஜோசியத்துக்காக கிளியை பயன்படுத்துபவர்களும் பிடிபட்டால் 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.