தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்-அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

Update: 2023-06-10 17:28 GMT

வாலாஜா

தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

வாலாஜாபேட்டை பஸ் நிலையத்தில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத் காந்தி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் 10 கிலோ எடை கொண்ட அரிசி என பல நல உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமல் ராகவன், நகர மன்ற உறுப்பினர்கள் இர்ப்பான் தியாகராஜன், டி ரவிச்சந்திரன், செந்தில், நகர தி.மு.க.செயலாளர் தில்லை, மாணவர் அணி மாவட்ட செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்