நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது. விழாவுக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

Update: 2022-10-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி அருகே உள்ள மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், கழக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஏழை, எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

மேடை அமைக்கும் பணி

இதை முன்னிட்டு விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர், விழா மேடை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.

அப்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான சுப்ராயலு, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மடம்.பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பி.கே.முரளி, நீலமங்கலம் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

தியாகதுருகம்

முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற 70 அடி உயர கொடிக்கம்பங்கள், அலங்கார தோரணங்கள் அமைக்கும் பணியையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். அப்போது தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன், பொதுக்குழு உறுப்பினர் மவுண்ட்பார்க் பள்ளி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத் தலைவர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்