நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவி

பாவூர்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கீழப்பாவூரைச் சேர்ந்த தொழிலாளி சுடலைமுத்துவுக்கு தேய்ப்பு பெட்டி, பூலாங்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மேகலிங்கத்திற்கு தையல் எந்திரம் ஆகியவற்றை மாவட்ட தி.மு.க. செயலர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, பேரூர் செயலாளர்கள் கீழப்பாவூர் ஜெகதீசன், மேலகரம் சுடலை, பேரூராட்சி மன்ற தலைவர்கள் பி.எம்.எஸ்.ராஜன், வேணி, மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், பஞ்சாயத்து தலைவர் திரவியக்கனி குணரத்தினம், பேரூராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் சுந்தரம் (எ) சேகர், நாகராஜ் எம்.சரவணார், மைதீன்கனி மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் மணிராஜ், மாரிமுத்து பாண்டியன், கீழப்பாவூர் நிர்வாகிகள் அறிவழகன், முருகன், ஆதிதிராவிடர் அணி பாலசுப்பிரமணியன், பாலமுருகன், மாரிசெல்வம், கோபால், பேரூர் இளைஞரணி சுடர்பாண்டியன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்