ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் :மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி வழங்கினார்

ஆலடியூரில் நடைபெற்ற கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாவில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி வழங்கினார்.;

Update: 2023-01-06 18:45 GMT

ஏரல்:

ஆலடியூரில் நடைபெற்ற கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாவில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி வழங்கினார்.

கனிமொழி எம்.பி. பிறந்தநாள்

ஏரல் அருகே ஆலடியூரில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கி ஏழை, எளிய மக்களுக்கு சில்வர் குடம் மற்றும் இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சிநிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வெள்ளாளன்விளை

கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.இளங்கோ தலைமையில் வெள்ளாளன்விளையில் நடந்தது, நயினார்பத்து, சுதந்திர நகர், விஜயநாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 570 பேருக்கு சேலை, தையல் எந்திரம், பள்ளிச் சீருடைகளை வழங்கப்பட்டது. முன்னதாக ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகம்மது வரவேற்றார். வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம், கிழக்கு ஒன்றிய பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். உடன்குடி மெயின் பஜார் நான்கு சந்திப்பில் நகரச் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ராஜேஷ் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாலாட்டின்புத்தூர்

நாலாட்டின்புத்தூரில் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதரகண்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் அன்று பிறந்த 18 குழந்தைகளுக்கு, நகர தி.மு.க. சார்பில் தங்க மோதிரம், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்து 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்