ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
சேரன்மாதேவி:
பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் நலிவடைந்த பெண்களுக்கு தையல் எந்திரம், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவற்றை தனது சொந்த செலவில் இருந்து இசக்கி சுப்பையா நேரில் சென்று வழங்கினார்.
இதில் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பத்தமடை நகரச் செயலாளர் சங்கரலிங்கம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வெள்ளாங்குளிஅரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் படிக்க வாய்ப்பு பெற்ற திரிஷா என்ற மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.