மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நீதிபதி இருதய ராணி வழங்கினார்.;

Update: 2023-02-02 18:49 GMT

ராஜபாளையம்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணைக்குழுவின் மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான இருதய ராணி, தாசில்தார் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், தனி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்களுக்கான குறைகள் குறித்து நீதிபதி இருதய ராணி கேட்டு அறிந்தார்.

பின்னர் மலைவாழ் மக்கள் அளித்து 14 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆதார் அட்டை, வங்கி கணக்கு தொடக்கம், குடும்ப உறுப்பினர் அட்டை கோரும் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் 34 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்