காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.

Update: 2022-11-24 10:49 GMT

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை, எளிய சிறுபான்மையினருக்கு ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்த்தி, காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுதலைவர் எஸ்.டி.கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்