உள்ளி ஊராட்சியில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உள்ளி ஊராட்சியில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2022-08-10 12:30 GMT

குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் சி.ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெய்சங்கர், துணைத் தலைவர் கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுகந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, வேளாண் உபகரணங்கள், தேனீ வளர்ப்பு பெட்டி, காய்கறி விதைகள், தையல்எந்திரம், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 88 பயனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமா சங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா, மின்வாரிய உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், டி.எம். பெரியசாமி, ஊராட்சி செயலாளர் சிவானந்தம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் சுபிசந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்