ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
வேட்டவலம்
ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சக்கரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 619 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்து 43 ஆயிரத்து 459 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முகாமில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடேசன், இணை இயக்குனர் (வேளாண்மை) பாலா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், உதவி திட்ட அலுவலர் ஜான்சன், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அருணாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், அட்மா குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சூர்யா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பல்கிஸ் ஜான்பாஷா, வருவாய் ஆய்வாளர் அல்லி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், தோட்டக்கலைத்துறை உதவி வேளாண் அலுவலர் பரிதிமால் கலைஞன், கீழ்பென்னாத்தூர் வட்டார இயக்க மேலாளர் சுகந்தி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார் நன்றி கூறினார்.