மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-07-10 18:45 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 பேருக்கு தலா ரூ.2 லட்சத்தில் செயற்கை கால்கள், ஒருவருக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ.34.71 லட்சம் மதிப்பில் 6 பேருக்கு நில அகழ்வு மற்றும் சீரமைப்பு வாகனங்கள் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார். மொத்தம் ரூ.2 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்