கருணாலயா முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்
கருணாலயா முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்;
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் வழிகாட்டுதல் படி மலேசியாவில் உள்ள உதயநிதி ஸ்டாலின் பேரவை சார்பில் திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில் காலை, மதிய உணவு, உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் மலர்வண்ணன், சதாசிவம், இளைய சூரியன், உதயநிதி ஸ்டாலின் பேரவை ஒருங்கிணைப்பாளர் மலேசியா சம்பத், பேரவை செயலாளர் செந்தாமரைச்செல்வன் ஆகியோர் உணவு, உடைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் இலபழனியப்பன், சிவகுமார், மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாமோதரன், கார்த்திக், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் கார்த்தி, குமரகுரு, உதயநிதி ரசிகர் மன்றத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.