கிறிஸ்துமஸ் பண்டிகையில் நலத்திட்ட உதவி; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் நலத்திட்ட உதவிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;
விக்கிரமசிங்கபுரம்:
சிவந்திபுரம் ஊராட்சி ஆறுமுகம்பட்டி தூய அபிஷேகநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பாடல் குழுவினர் ஆராதனை நடைபெற்றது. குருவானவர் சாமுவேல் பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் எந்திரம், கிரைண்டர், கல்வி உதவித்தொகை, தாய்மார்களுக்கு புத்தாடைகள் வழங்கபட்டது, நிகழ்ச்சியில் ஏழு சேகரங்களை சேர்ந்த குருவானவர்கள், பாடல் குழுவினர், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.