மறுவாழ்வு இல்லத்துக்கு நல உதவி
தி.மு.க. இலக்கிய அணி சார்பில் மறுவாழ்வு இல்லத்துக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நல உதவிகளை வழங்கினார்;
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி செல்லியம்பட்டி மறுவாழ்வு இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் பொன் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, ஒன்றிய செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு மறுவாழ்வு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இனிப்பு, அசைவ உணவு மற்றும் பல்வேறு நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், நிர்வாகிகள் காமராஜ், சேட்டு, முனியப்பன், போஸ்கோ, கிருஷ்ணன், கந்தையன், லட்சுமணன், செல்வராஜ், பாலு, இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.