12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

Update: 2023-01-30 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனைபட்டா, தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 263 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், முடக்கு நீக்க வல்லுனர் பிரகாஷ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மீனவளத்துறை சார்பில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழங்குடியினர் இருளர் இனத்தைச் சேர்ந்த 10 பேருக்கு இலவச மீன்பிடி வலைகள் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 100 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்