"மோடி கபடி லீக் போட்டி" ஜோதிக்கு வரவேற்பு

நாகையில் “மோடி கபடி லீக் போட்டி” ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-09-13 17:44 GMT

வெளிப்பாளையம்:

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி, பா.ஜ.க விளையாட்டுத்திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் "மோடி கபடி லீக் போட்டிகள்" வருகிற 17-ந்தேதி மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவில் வரும் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மோடி கபடி லீக் ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜோதி நேற்று முன்தினம் மாலை நாகைக்கு வந்தது. ஜோதிக்கு நாகை மாவட்ட பா.ஜ.க. சார்பில் நீலாயதாட்சியம்மன் கோவில் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மோடி கபடி லீக் ஜோதியை பெற்றுக்கொண்டு நாகை மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க நகரத் தலைவர் ஆறுமுகம், விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் செழியன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் ஆனந்தவடிவேல், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து ்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்