ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனத்தின் எடை சரிபார்ப்பு

ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனத்தின் எடை சரிபார்க்கப்பட்டது.

Update: 2023-05-31 18:15 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்குகளில் இருந்து ரேஷன்கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று திடீர் சோதனை நடத்தும்படி வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் இருந்து சைதாப்பேட்டை ரேஷன்கடைக்கு அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி அதன் எடையை சோதனை செய்வதற்காக அருகே உள்ள தனியார் மின்னணு எடை மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அரிசி மூட்டைகளுடன் வாகனத்தின் எடை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து ரேஷன்கடையில் அரிசி மூட்டைகள் இறக்கி வைத்த பின்னர் வாகனத்தின் எடை ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையில் வாகனத்தின் எடை மற்றம் அரிசி மூட்டைகளின் எடை சரியாக இருந்தது. எவ்வித குறைபாடும் கண்டறியப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு செல்லும் உணவுப்பொருட்களின் அளவு குறைவதை தடுக்க இதுபோன்ற சோதனை அடிக்கடி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்