வீரசங்கிலிமடம் தாமரை ஊருணியை தூர்வார வேண்டும்
வீரசங்கிலிமடம் தாமரை ஊருணியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா புதுப்பட்டினம் அருகே உள்ள வீரசங்கிலிமடம் கிராமத்தில் உள்ள குடிநீர் குளமான தாமரை ஊருணியை அல்லித் தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளன, இதனால் இந்த ஊருணியில் தண்ணீர் முற்றிலுமாக மாசடைந்து போய்விட்டது. இந்த ஊருணியில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லித்தாமரை செடிகளை முழுமையாக அகற்றி ஊருணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.