வெள்ளிக்கவசம் அணிவிப்பு

நாட்டுமடம் மாரியம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

Update: 2023-10-01 18:45 GMT

வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் கோவிலில் இருந்து நாட்டுமடம் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்