"மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்" - அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் ஆசை மட்டுமே என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-07-09 06:50 GMT

சென்னை,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் ஆசை மட்டுமே; ஆனால் அவர்களுக்கு உரிமை இல்லை. மேகதாது அணை கட்டக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை உள்ளது. காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நோ மேன்ஸ் ஏரியா உள்ளது. அதாவது கபிணிக்கு கீழே தண்ணீர் வழியும் இடம், அங்கிருந்து 80 டிஎம்சி தண்ணீர் நமக்கு வருகிறது.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். பல விஷயங்கள் இருக்கின்றன. அரசியல் களத்தில் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பார்கள். நாங்கள் கட்டவே விட மாட்டோம் என்போம். எக்காலத்திலும் மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்" என்று கூறினார்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்